VIDEO: மகாசிவராத்திரியில் அசைவ சாப்பாடு.. மாணவிகள் முடியை பிடித்திழுத்து டெல்லி SAU பல்கலைக்கழகத்தில் மோதல்
- மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர்.
- அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
நேற்று (புதன்கிழமை) மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் செயல்பட்டு வரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் (SAU) அசைவம் சாப்பிட்டது தொடர்பாக இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி மாணவர் அமைப்பான SFI (இந்திய மாணவர் கூட்டமைப்பு) மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்பான ABVP (பாரதிய வித்யார்த்தி பரிஷத்) உறுப்பினர்கள் இடையே மொதலானது ஏற்பட்டது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று அசைவம் சமைக்க கூடாது என்றும் யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும் ஏபிவிபி அமைப்பினர் கூறியுள்ளனர். மீறி நேற்று அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்ளை ஏபிவிபியின் அடித்ததாக SFI அமைப்பு தெரிவித்தது. இதை எதிர்த்த எஸ்எப்ஐயினருடன் ஏபிவிபியினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக SFI வெளியிடுள்ள அறிக்கையில், ஏபிவிபி குண்டர்கள் அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களைத் தாக்கினர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, தெற்காசிய பல்கலைக்கழகத்திலிருந்து பிற்பகல் 3.45 மணியளவில் மைதான்கரி காவல் நிலையத்திற்கு மோதல் தொடர்பான அழைப்பு வந்தது. நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, இரண்டு குழுக்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.
மோதல் தொடர்பாக SAU நிர்வாகம் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முறையான புகார் எதுவும் வரவில்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தால் உள் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.