டிஸ்னி இந்தியா - ரிலையன்ஸ் இணைப்பால் யாருக்கு ஆபத்து?
- ஜியோசினிமா - டிஸ்னி இந்தியா இணைப்பு என்பது இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இந்த இணைப்பில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் பகிர்ந்துகொள்ளப்படாது என்றும் சொல்லப்படுகிறது.
அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இடையேயான 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான இணைப்பிற்கு இந்திய போட்டி ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையும், டிஸ்னி நிறுவனத்திடம் ஐபிஎல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் உள்ளது. இந்நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மூலம் மொத்த கிரிக்கெட் உரிமையும் இந்த கூட்டணிக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணத்தால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டித்தன்மை முற்றிலுமாக குறைந்து மோனோபோலி நிலை உருவாகும் என சொல்லப்படுகிறது.
ஆகவே ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைப்பு என்பது இந்திய எண்டர்டெயின்மென்ட் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய போட்டி ஆணையம் தனது கருத்தை 2 நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது.
இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மீது ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்பதற்கான காரணங்களை கூறுமாறு அந்நிறுவனங்களிடம் இந்திய போட்டி ஆணையம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இந்த இணைப்பில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள் பகிர்ந்துகொள்ளப்படாது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த 2 நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தில் ரிலையன்ஸ் 56% பங்கும், டிஸ்னி 37% பங்கும் வைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த புதிய நிறுவனத்தில் 110க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா ஆகிய இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா இணைப்பினால் உருவாகும் புதிய நிறுவனம் சோனி, ஜீ என்டர்டெயின்மென்ட், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன் 120 தொலைக்காட்சி சேனல்களும் மற்றும் இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு கடும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.