இந்தியா

127 வயதில் யோகாசனம் செய்யும் முதியவர்- வீடியோ வைரல்

Published On 2024-06-17 02:54 GMT   |   Update On 2024-06-17 02:54 GMT
  • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
  • வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது.

சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதியவர் ஒருவர் யோகா செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கியது. சுவாமி சிவானந்தா என்று அழைக்கப்படும் யோகா ஆசிரியரான அவருக்கு தற்போது 127 வயதாகிறது. யோகா கலையில் அவரது செயல்பாடுகளை பாராட்டி பத்மஸ்ரீ கவுரவம் பெற்றுள்ளார்.

தீவிர யோகா பயிற்சியால் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் நடந்த ஒரு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது அவர் சில யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வலைத்தளவாசிகளின் பாராட்டையும் பெற்றது. யோகா மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News