இந்தியா
உ.பி. இடைத்தேர்தலில் பிரதமர் மோடி தலைமையால் வெற்றி: யோகி ஆதித்யநாத் புகழாரம்
- உத்தர பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
- இதில் காசியாபாத் உள்பட 7 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் காசியாபாத், கெய்ர், புல்பூர், மஜவான், குண்டர்கி, கதேஹரி, ஆகிய 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஆர்.எல்.டி. கட்சி மீராபூர் தொகுதியில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்நிலையில், உபி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் வெற்றி கிடைத்துள்ளது.
பிரதமர் மோடியின் கொள்கைகள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என புகழாரம் சூட்டியுள்ளார்.