அரசுப் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளி புகைப்படம் வெளியீடு - தகவல் தந்தால் ரூ.1 லட்சம்
- பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் சோதனைச்சாவடிக்கு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
- அவர் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் தனது சொந்த ஊருக்கு பஸ் ஏற 26 பெண் காத்திருந்தார்.
அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த ஒருவர், வேறு இடத்தில பஸ் நிற்பதாக கூறி ஆளில்லாத பஸ்ஸில் ஏறச் செய்து பாலியல் வன்கொடுமை செய்து ஓடிவிட்டார். அவர் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் சோதனைச்சாவடிக்கு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில ஆளும் பாஜக கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
குற்றவாளியின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் காடே (36 வயது) என்பதும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய அவர் கடந்த 2019 இல் சிறையில் இருந்து பெயிலில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே வன்கொஉடமை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி பஸ் நிலையத்தை அவர்கள் சூறையாடினார்கள்.
இந்த நிலையில் அரசு பஸ்சுக்குள் இளம் பெண் வன்கொடுமை தொடர்பாக குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய தலைவி ரூபாலி ஷாகன்கர் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த சம்பவம் துரதிருஷ்ட வசமானது. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். குற்றவாளி 2 அல்லது 3 நாளில் பிடிபடுவார். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் கண்டிப்பாக தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து மகளிர் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே குற்றவாளி ராமதாஸ் காடே புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த அவசரக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ள அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சார்னிக், விரைந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.