3வது போட்டியில் வெற்றி: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது ஆப்கானிஸ்தான்
- முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 127 ரன்களில் ஆல் அவுட்டானது.
- ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஹராரே:
ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 19.5 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரையன் பென்னட் 31 ரன்னும், வெஸ்லே மாதவரே 21 ரன்னும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், நவீன் உல்-ஹக், அஸ்மதுல்லா, முஜிபுர் ரகுமான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. அஸ்மதுல்லா ஒமர்சாய் 34 ரன்னிலும், குல்பதின் நயீப் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய முகமது நபி 24 ரன்னுட ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, முசாராபானி, ட்ரெவர் குவாண்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அஸ்மதுல்லா ஓமர்சாய்க்கும், தொடர் நாயகன் விருது நவீன் உல் ஹக்குக்கும் வழங்கப்பட்டது.