null
முடிவுக்கு வந்தது இழுபறி: சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி ஒப்புதல்
- இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
- 2026 தொடரில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது.
பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ தெரிவித்தது. இதனால் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டது.
ஐசிசி-யின் ஹைபிரிட் மாடல் தொடரை பாகிஸ்தான் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 2026 வரையிலான ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலாக நடத்த ஐசிசி ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். அதேவேளையில் பாகிஸ்தான் 2026-ல் நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்காது. பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்தப்படுவதற்கு ஐசிசி பாகிஸ்தானுக்கு இழப்பீடு ஏதும் வழங்காது.
பாகிஸ்தானில் உள்ள மூன்று மைதானங்களில் போட்டிகள் அனைத்தும் நடைபெறும். இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்.
அதேவேளையில் 2027-க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பெண்கள் ஐசிசி தொடர் நடத்த வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தியா தகுதி சுற்றுடன் வெளியேறினால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி முறையே லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் போட்டி துபாயில் நடத்தப்படும்