கிரிக்கெட் (Cricket)

IND vs AUS: சதம் விளாசிய ஸ்மித் - டிராவிஸ் ஜோடி.. விக்கெட் வேட்டையில் பும்ரா

Published On 2024-12-15 06:40 GMT   |   Update On 2024-12-15 07:36 GMT
  • நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.
  • ஸ்மித் 101 ரன்களுடன் பும்ரா வீசிய பந்தில் ரோகித்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தபோது மழை திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 

மீண்டும் மழை குறுக்கிட்டதால் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார்.  நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக  13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லபுசனே 12 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்ததாக ஸ்டீவன் சுமித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். இதில் இருவருமே சதம் விளாசி உள்ளனர்.

 

தற்போது ஸ்மித் 101 ரன்களுடன் பும்ரா வீசிய பந்தில் ரோகித்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார், டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரிசஷப் பந்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளும், நிதிஷ் குமார் ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 87 ஓவரில் 335 ரன்கள் எடுத்துள்ளது  

Tags:    

Similar News