கிரிக்கெட் (Cricket)

ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் நிதான ஆட்டம்.. 2-ம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை

Published On 2024-11-23 10:02 GMT   |   Update On 2024-11-23 10:02 GMT
  • டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.
  • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். கே.எல். ராகுலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் தொடக்க ஜோடியை பிரிக்க சிரமப்பட்டனர்.

ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் நாதன் லயனும் பந்து வீசி எந்த பயனும் இல்லை.

இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 90 ரன்கள் அடித்தும் கே.எல். ராகுல் 153 பந்துகளில் 62 ரன்கள் அடித்தும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News