ஐ.பி.எல்.
டெல்லி அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமனம்
- 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
- தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. பத்து அணிகள் மோதும் இந்த தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்நிலையில் டெல்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.