கிரிக்கெட் (Cricket)
null

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்

Published On 2024-10-07 09:10 GMT   |   Update On 2024-10-07 10:24 GMT
  • இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா பணியாற்றி வந்தார்.
  • அவர் பயிற்சியின் கீழ் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இலங்கை அணி டி20 உலகக் கோப்பைக்கு பிறகில் இருந்து தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வந்தது. இதனால் தற்காலிக பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஜெயசூர்யா செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவரேயே முழு நேர தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ஜெயசூர்யா தற்காலிக பயிற்சியாளராக இருந்த போது இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

 

இலங்கை அணி 27 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 10 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி அக்டோபர் 13-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இருந்து ஜெயசூர்யா புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை வரை இவர் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News