கிரிக்கெட் (Cricket)

கான்பூர் டெஸ்ட்: முதல்நாள் உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்

Published On 2024-09-27 07:06 GMT   |   Update On 2024-09-27 07:06 GMT
  • ஜாகிர் ஹசன் 24 பந்துகள் சந்தித்து 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
  • இந்திய தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஜாகிர் ஹசன்- ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாகிர் ஹசன் ஒரு ரன் எடுக்க முடியாமல் திணறினார். பும்ரா வீசிய முதல் 3 ஓவரையும் இவர் மெய்டன் செய்தார்.

1 ரன் எடுக்க திணறிய இவர் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகள் சந்தித்து 1 ரன் கூட எடுக்க முடியாமல் 0 ரன்னில் வெளியேறினார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷத்மான் இஸ்லாம் 4 பவுண்டரிகள் விரட்டி 24 ரன்கள் குவித்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து கேப்டன் சாண்டோ மற்றும் மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை வங்கதேச அணி 26 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது. சாண்டோ 28 ரன்னிலும் மொமினுல் ஹக் 17 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

Similar News