கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர்: லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு

Published On 2024-12-10 16:05 GMT   |   Update On 2024-12-10 16:09 GMT
  • வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
  • முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

டாக்கா:

வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

தற்போது இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடருக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடருக்கான அணியின் விவரம் வருமாறு:

லிட்டன் தாஸ் (கேப்டன்), சவுமியா சர்க்கார், தன்ஜித் ஹசன் தமிம், பர்வேஸ் ஹொசைன் ஏமான், ஆபிப் ஹொசைன், மெஹிதி ஹசன், ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன், ஷேக் மெஹிதி ஹசன், ரிஷித் ஹொசைன், நசன் அகமது, தஸ்கின் அகமது, தன்ஜிம் ஹசன் ஷாகிப், ஹசன் மஹ்முது, ரிபான் மாண்டல்

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

Similar News