கிரிக்கெட் (Cricket)

இரட்டை சதமடித்து அசத்திய சர்பராஸ் கான்: இரண்டாம் நாள் முடிவில் மும்பை 536/9

Published On 2024-10-02 17:59 GMT   |   Update On 2024-10-02 17:59 GMT
  • டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய மும்பை அணியின் சர்பராஸ் இரட்டை சதமடித்தார்.

லக்னோ:

இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 86 ரன்னும், சர்பராஸ் கான் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகானே 97 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனுஷ் கோட்யான் சர்பராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த நிலையில் தனுஷ் கோட்யான் 64 ரன்னில் அவுட் ஆனார். ஷர்துல் தாக்கூர் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.

பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி 138 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 221 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

Tags:    

Similar News