கிரிக்கெட் (Cricket)

விஜய் ஹசாரே டிராபி: சாய் சுதர்சன் இல்லாத தமிழக அணி அறிவிப்பு

Published On 2024-12-13 11:43 GMT   |   Update On 2024-12-13 11:43 GMT
  • ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த அணியில் சாய் சுதர்சன் இடம் பெறவில்லை.

இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2024 - 25-க்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 21-ம் தேதி முதல் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சாய் சுதர்சன் இடம் பெறவில்லை. இந்த அணியில் ஷாரூக் கான், பாபா இந்திரஜித், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக அணி விவரம்; சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் என் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ணா குமார், துஷார் ரஹேஜா, ஷாரூக் கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்.

Tags:    

Similar News