கிரிக்கெட் (Cricket)

பும்ரா வீசிய 15 பந்தில் 4 முறை அவுட்டான விராட் கோலி

Published On 2024-09-27 09:32 GMT   |   Update On 2024-09-27 09:32 GMT
  • பும்ரா வீசிய பந்தில் விராட் கோலி மிகவும் தடுமாறினார்.
  • வேகப்பந்து வீச்சில் விரக்தியடைந்த விராட் கோலி அக்சர் படேல் பந்தில் போல்ட் ஆனார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் வலை பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த விராட் கோலிக்கு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீசினார். 15 பந்துகளில் 4 முறை கோலி அவுட் ஆனார்.

பும்ராவின் 4-வது பந்து கோலியின் காலில் பட்டது. உடனே பும்ரா அவுட் என தெரிவிக்க அதனை கோலி ஒப்புக்கொண்டார். இதனால் விரக்தியடைந்த விராட், சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிய வலையில் பேட்டிங் செய்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களும் அவரை தடுமாற வைத்தனர். இறுதியில் அக்சர் படேல் பந்தில் போல்ட் ஆனார். உடனே பயிற்சியே வேண்டாம் என்பது போல வெளியேறினார். 

Tags:    

Similar News