அமீர் ஜாங்கோ, கெய்சி கார்டி அபாரம்: ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்
- முதலில் ஆடிய வங்கதேசம் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 325 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
செயிண்ட்கிட்ஸ்:
வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெRறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்தது. மஹமதுல்லா 84 ரன்னும், ஜேகர் அலி 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கா அரை சதமடித்து 73 ரன்னில் அவுட்டானார். கேப்டன் மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. 31 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. கெய்சி கார்டி, அமீர் ஜாங்கோ ஜோடி அதிரடியாக ஆடியது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கெய்சி கார்டி 95 ரன்னில் அவுட்டானார். அவர் வெளியேறியதும் அமீர் ஜாங்கோ பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அமீர் ஜாங்கே தனது முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.