null
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்.. ரூ.1.60 கோடிக்கு விலைபோன 16 வயது தமிழக வீராங்கனை
- மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 17 ஆண்டுகள் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டிகளை கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ. அறிமுகப்படுத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய 5 அணிகள் விளையாடி வருகிறது.
முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம் பெங்களூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை கமலினியை ₹1.6 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவரின் அடிப்படை விலையாக ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தற்போது அபாரமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.