ஊக்கமருந்து சர்ச்சை: ஒரு மாத தடையை ஏற்றுக் கொண்ட ஸ்வியாடெக்
- பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது.
- தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக ஸ்வியாடெக் கூறினார்.
லண்டன்:
பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக்கிடம் (போலந்து) கடந்த ஆகஸ்டு மாதம், போட்டியில் பங்கேற்காத சமயத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பிறகு அப்பீல் செய்ததால் இடைநீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக 23 வயதான ஸ்வியாடெக் தற்போது அறிவித்த பிறகே அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தகவல் அனைவருக்கும் தெரிந்துள்ளது. 'இது தெரியாமல் நடந்த தவறு, பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மெலடோனின் மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது' என ஸ்வியாடெக் அளித்த விளக்கத்தை விசாரணை கமிட்டியினர் ஏற்றுக்கொண்டதால் குறைந்த தண்டனையுடன் தப்பித்தார். வருகிற 4-ந்தேதிக்கு பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கலாம்.