தமிழ்நாடு
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு- கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
- மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலகதரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது.
- ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரெயில்வே தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ. 6,080 கோடியை சாதனை அளவாக ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டு மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி தங்கள் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை மற்றும் சென்னை விஜயவாடா இடையே இரண்டு வந்தே பாரத் ரெயில் சேவைகளை மாநிலத்துக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.