கூவத்தூரில் நடிகைகள் - அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை கோரும் இயக்குநர் சேரன்
- கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி
- கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார்
எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சேரன், "ஏ.வி.ராஜுவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி ஆகியோரை டேக் செய்துள்ள சேரன், நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.