தமிழ்நாடு

முதலமைச்சரிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. நிர்வாகி- 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published On 2024-04-30 10:57 GMT   |   Update On 2024-04-30 10:57 GMT
  • மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.
  • போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

மதுரை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் செல்வதற்காக நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.

விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பிலிருந்த போலீசாரை ஆபாசமாக திட்டியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது என்பது உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி சங்கர் பாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News