தமிழ்நாடு

ஆரஞ்சு வண்ணத்தில் ஒளிர்ந்த சென்னை ரிப்பன் கட்டிடம்

Published On 2022-11-26 03:20 GMT   |   Update On 2022-11-26 03:20 GMT
  • ஐ.நா. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ந்தேதி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ரிப்பன் கட்டிடம் மற்றும் நேப்பியர் பாலம் நேற்று ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது.

சென்னை:

பாலியல் தொந்தரவு, உடல் மற்றும் மன அளவிலான துன்புறுத்தல் உள்பட பல பிரச்சினைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுத்து பெண்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு ஏதுவாக ஐ.நா. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ந்தேதி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் 25-ந்தேதி முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை 16 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான பாலின வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி பங்கேற்க உள்ளது.

இதனை வெளிப்படுத்தும் வகையில், ரிப்பன் கட்டிடம் மற்றும் நேப்பியர் பாலம் நேற்று ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது. இதே போல அடுத்த மாதம் 2-ந்தேதி மற்றும் 10-ந்தேதியும் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட உள்ளது.

Tags:    

Similar News