தமிழ்நாடு
நிலக்கரி வரி விதிப்பில் முறைகேடு- காங்கிரஸ் தலைவர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
- சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 540 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் காங்கிரஸ் தலைவர்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராம் கோபால் வர்மா, கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் சுனில் அகர்வால் உள்ளிட்டவர்கள் பலரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.