தமிழ்நாடு (Tamil Nadu)

சொத்துவரி உயர்வுக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு

Published On 2024-09-29 09:10 GMT   |   Update On 2024-09-29 09:10 GMT
  • சொத்து வரி உயர்வு என்பது வணி கர்களுக்கு மிகப்பெரும் சுமையாகும்.
  • அரசுக்கு எதிர்ப்பான மனநிலையை வணிகர்கள் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும்.

சொத்துவரி உயர்வுக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சொத்துவரி பல மடங்காக உயர்த்தப்பட்டது. வணிகக் கட்டிடங்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இதில் இருந்து மக்கள் மீண்டு வர இயலாத நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியில் சொத்துக்களின் மீது 6 சதவீதம் கூடுதல் வரி விதிக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

கடந்த மாதம் பன் மடங்க உயர்த்தப்பட்ட உரிமக்கட்டணமும், தொழில் வரியும் நீக்கப்பட வேண்டும் என்கிற பேரமைப்பின் கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் சொத்து வரி உயர்வு என்பது வணி கர்களுக்கு மிகப்பெரும் சுமையாகும்.

இது அரசுக்கு எதிர்ப்பான மனநிலையை வணிகர்கள் பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும். எனவே உடனடியாக சொத்துவரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News