தமிழ்நாடு

2 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி, விருதுநகர் செல்கிறார்

Published On 2023-09-26 08:05 GMT   |   Update On 2023-09-26 08:05 GMT
  • சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
  • விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

சென்னை:

கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையில் இருந்து நாளை மறுநாள் (28-ந் தேதி) காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் கவர்னர் அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் செல்கிறார்.

அங்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.

அதன் பிறகு ஆழ்வார் குறிச்சிக்கு சென்று பாரம்பரிய பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று ஆசிரம குழந்தைகள் மற்றும் பணியாளர்களை சந்திக்கிறார்.

சிவ சைவபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். 29-ந் தேதி கோவிந்தப்பேரி சென்று நெல்கட்டும் செவல் கிராமம் செல்கிறார். பூலித்தேவர் அரண்மனையை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து ஒண்டி வீரன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

அதன் பிறகு விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 29-ந் தேதி இரவு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Tags:    

Similar News