ரெயில் முன் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை
- பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர்.
- குமாரின் குடும்பத்தினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட் பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் விருது நகர் மாவட்டம் சாத்தூர் தோட்டி லேயன்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பது தெரிய வந்தது. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று குமார் திருவனந்தபுரத்திலிருந்து ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குமாரின் குடும்பத்தினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடந்தது. அவர் தற்கொலை செய்தது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.