தமிழ்நாடு
நெல்லை அருகே மரத்தின் 1 அடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழை
- சாம்ராஜ் சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறிய ரக கோழிக்கூடு வாழைகள் பயிரிட்டுள்ளார்.
- வாழை மரத்தில் சுமார் 1 அடி உயரத்தில் குலை தள்ளி உள்ளதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை அடுத்த இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ்(வயது 28). விவசாயி.
இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறிய ரக கோழிக்கூடு வாழைகள் பயிரிட்டுள்ளார்.
வழக்கமாக மேல் பகுதியில் குலைகள் தள்ளும் நிலையில், இதில் ஒரு வாழையில் மட்டும் சுமார் 1 அடி உயரத்தில் குலை தள்ளி உள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.