தமிழ்நாடு

சென்னிமலை நகரில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கியது

Published On 2023-03-20 04:53 GMT   |   Update On 2023-03-20 04:53 GMT
  • சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை நகர பகுதிக்கு வந்து விட்டன.
  • சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

சென்னிமலை:

சென்னிமலை வனப்பகுதியில் இருந்த குரங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி சென்னிமலை நகர பகுதிக்கு வந்து விட்டன. வீட்டு மொட்டை மாடிகளில் காய வைத்திருக்கும் உணவு பொருட்களை எடுத்து தின்பது, குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்துவது, கடைகளில் உள்ள பொருட்களை நாசப்படுத்துவது, கேபிள் வயர்களை அறுப்பது என நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்தது.

இதனால் சென்னிமலையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஈரோடு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து சென்னிமலை நகர பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்தனர்.

கூண்டுக்குள் 7 குரங்குகள் சிக்கிக்கொண்டன. பின்னர் அவற்றை வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், சென்னிமலை நகர பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அட்டகாசம் செய்ய தொடங்கிவிடும் என்றனர்.

Tags:    

Similar News