நான்தான் நிரந்தர பொதுச்செயலாளரா? புஸ்ஸி ஆனந்த்
- நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும்.
- பொதுச்செயலாளர் என்பது முகவரி தான்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-
வருகிற வழிகளில் எல்லாம் வைக்கப்பட்ட பேனர் மற்றும் வரவேற்பு சிறப்பாக இருந்தது. ஆனால் அதில் ஒன்றில் நிரந்தர பொதுச்செயலாளர் என்று போடப்பட்டு இருந்தது. தலைவர் எனக்கு பொதுச்செயலாளர் பதவி மட்டும் கொடுத்து இருக்கார்.
அது நிரந்தரமா இல்லையா என்பதை முடிவு பண்ண வேண்டியது நமது தலைவர் தளபதி தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும். தளபதியோட ரசிகன் என்ற பதவி கடைசி காலம் வரைக்கும் என்று நான் சொன்னேன். அந்த பதவி தான் இன்று என்னை இந்த இடத்தில் தளபதி நிறுத்தி இருக்கிறார். அதனால தயவு செய்து பொதுச்செயலாளர் என்பது முகவரி தான். எப்பவும் நம்ம எல்லாரும் தளபதிக்கு கீழ தளபதி தொண்டனாகவும், தோழனாகவும் கடைசி காலவரைக்கும் நாம் இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.