தமிழ்நாடு
சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமான சுற்றுலா ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு
- சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளது.
- வருகிற 23-ந்தேதி புறப்படும் இந்த சுற்றுலா 6 நாட்களை கொண்டதாகும்.
சென்னை:
இந்திய ரெயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டிசி. பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளது.
வருகிற 23-ந்தேதி புறப்படும் இந்த சுற்றுலா 6 நாட்களை கொண்டதாகும். ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை சுற்றி பார்க்கவும் தங்கும் வசதி, உணவு, கப்பல் கட்டணம், விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, பயண காப்பீடு அனைத்தையும் உள்ளடக்கிய கட்டணம் ஒருவருக்கு ரூ.51,500 ஆகும். இந்த தகவலை சுற்றுலா மேலாளர் மாலதி ரத்தினம் தெரிவித்துள்ளார்.