தமிழ்நாடு

வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்ட கதவின் பூட்டை திறக்க முடியாததால் பரபரப்பு

Published On 2024-03-22 06:39 GMT   |   Update On 2024-03-22 06:39 GMT
  • வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர்.
  • அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

கடலூர்:

பாராளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

இதையொட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் நீண்ட நேரமாக வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே காத்திருந்தனர்.

இது மட்டுமின்றி தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாக்குபதிவு எந்திரத்தில் பல்வேறு சங்தேகங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்ட அறையின் பூட்ட திறக்கபட முடியாமல் இருந்து வருவதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

Tags:    

Similar News