தமிழ்நாடு

குற்றால அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகள்

Published On 2024-12-14 09:20 GMT   |   Update On 2024-12-14 09:20 GMT
  • மெயின் அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தொடர் மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் சிற்றருவி புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 40 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

நேற்று இரவு மழை நீடித்ததால் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பழைய குற்றால அருவியில் நடைபாதை வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

மெயின் அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெயின் அருவி பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் உள்ளன.

வெளியூர்களிலிருந்து குற்றாலம் நோக்கி வரும் அய்யப்ப பக்தர்கள் அருவி பகுதிகளுக்கு செல்லாத வாறு திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்திட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News