தமிழ்நாடு
95% கொள்ளளவை எட்டியது.. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படவுள்ளது
- முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்பட இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏரி திறக்கப்படுவதை அடுத்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து 6500 கன அடியாக உயர்ந்ததை அடுத்து நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் தற்போது 23.29 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதை அடுத்த அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.