மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
- மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் இந்தி மொழியின் முகமூடியில் சமஸ்கிருத முகம் ஒளிந்திருக்கிறது.
- வடமாநிலங்களை போல் தாய்மொழியை புறக்கணித்து சமஸ்கிருத மயமாக்கும் திட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.
சென்னை:
இந்தி திணிப்பால் தமிழ் அழியாது; ஆனால் தமிழர் பண்பாடு அழியும் என்பதால் எதிர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியை ஏற்றதால் பீகார், உ.பி., ம.பி, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அரியானாவின் பூர்வீக மொழிகள் சிதைந்து பண்பாடு மறைந்தது. ஆதிக்கத்தை உணராமல் போனவர்களின் தாய்மொழிகள் இந்தி மொழியால் கரைந்து காணாமல் போயின.
மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் இந்தி மொழியின் முகமூடியில் சமஸ்கிருத முகம் ஒளிந்திருக்கிறது.
வடமாநிலங்களை போல் தாய்மொழியை புறக்கணித்து சமஸ்கிருத மயமாக்கும் திட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.
மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையாக இருக்கிறது.
தன்னிலிருந்து திராவிட குடும்பத்து மொழிகளை கிளைத்திட செய்த தாய்மொழி தமிழ். சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவானது தான் இந்தி மொழி.
தமிழ் எனும் கோட்டைக்குள் ஓட்டை போட்டு இந்தி, சமஸ்கிருதம் நுழைய முயற்சி. வள்ளலார் உள்ளிட்டோர் சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து தாய்மொழியை ஆயுதமாக கொண்டனர்.
இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் தமிழை அழிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.