தமிழ்நாடு
கனமழை- கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வு
- சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது.
சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.
செல்விநகர் நீர் உந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர், அப்பகுதி மக்களிடம் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும் என்று கூறினார்.