தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து

Published On 2024-11-30 12:17 GMT   |   Update On 2024-11-30 12:23 GMT
  • சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
  • விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர்:

வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக வழக்கத்தை விட காற்றின் வேகம் 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் புயல், மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் மோசமான வானிலையால் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை விமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News