தமிழ்நாடு

வீடு வீடாக பொங்கல் தொகுப்பு டோக்கன் 3-ந்தேதி முதல் வினியோகம்

Published On 2024-12-31 06:18 GMT   |   Update On 2024-12-31 06:18 GMT
  • 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்.
  • இலவச வேஷ்டி-சேலைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

இதற்காக அரசு 250 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பொங்கல் தொகுப் புடன் இலவச வேஷ்டி-சேலைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில் ஜன வரி 9-ந்தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வினியோகிக்க டோக்கன் அச்சடிக்கப்பட்டு தயாராகி வருகிறது. இன்றைக்குள் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நியாயவிலை கடைக்காரர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்.

இதுபற்றி கூட்டுறவுத் துறை அதிகாரியிடம் கேட்டதற்கு வருகிற 3 அல்லது 4-ந்தேதியில் இருந்து வீடு வீடாக டோக்கன் வினியோகிக்கப்பட இருப்பதாகவும் அதில் நாள், நேரம் குறிப்பிட்டு வழங்கப்படும். பொங் கல் தொகுப்பை காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் வாங்கிடும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மண்டல அளவிலான கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் ரேஷன் கடை அதிகாரிகளுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News