தமிழ்நாடு

ஃபெங்கல் புயல் எதிரொலி- குடியரசு தலைவரின் திரூவாரூர் பயணம் ரத்து

Published On 2024-11-29 14:34 GMT   |   Update On 2024-11-29 14:34 GMT
  • வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
  • புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி குடியரசு தலைவர் நாளை (சனிக்கிழமை) ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதாக இருந்தார்.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.

இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News