தமிழ்நாடு

மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2025-02-27 13:36 IST   |   Update On 2025-02-27 13:36:00 IST
  • கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியார்கள் அனுப்பப்படுவதாகவும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், கிட்டத்தட்ட முப்பதாயிரம் கேங்மேன் பணியிடங்கள் அடக்கம். இதன் காரணமாக, பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியார்கள் அனுப்பப்படுவதாகவும், அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும், அவர்கள் மின் பழுதை நீக்கிவிட்டு அதற்கான பணத்தை மின் நுகர்வோர்களிடம் கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 30 ஆயிரம் கேங்மேன் காலிப் பணியிடங்களையும், இதரப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News