தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் கனமழை- கிடுகிடுவென நிரம்பும் ஏரிகள்

Published On 2024-11-30 11:23 GMT   |   Update On 2024-11-30 11:23 GMT
  • சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
  • சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியில் நீர்வரத்து 680 கன அடியாக உள்ளது. அதனால், பூண்டி ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 22.84 அடியாக உள்ளது.

புழல் ஏரியில் 2928 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 17.10 அடியாக உள்ளது.

சோழவரம் ஏரியில், 140 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 2.75 அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில், நீர் இருப்பு 2368 மில்லியன் கன அடி உள்ள நிலையில், நீர் வரத்து 4764 கன அடியாக உள்ளது. இதனால் தற்போதைய நீர் மட்டம் 19.02 அடியாக உயர்ந்துள்ளது.

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் நீர்வரத்து 30 கன அடி உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 30.34 அடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News