தமிழ்நாடு

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள்- சென்னை ரிட்டர்ன் பாவங்கள்

Published On 2024-11-03 12:59 GMT   |   Update On 2024-11-03 12:59 GMT
  • சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
  • பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்தது. இதையொட்டி வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடந்த புதன் கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

இதன் காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை நோக்கி செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை 8 வழிகளில் காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர். உளுந்தூர்பேட்டை,விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. அணிவகுத்து நிற்பதால், வாகனங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News