தமிழ்நாடு

அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறு நடைபோடும் முதலமைச்சருக்கு பாராட்டுகள்- செல்வப்பெருந்தகை

Published On 2024-12-11 09:28 GMT   |   Update On 2024-12-11 09:28 GMT
  • தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.
  • எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.

மாநில உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டினார்.

அப்போது அவர், "அசாத்திய சாதனையை நிகழ்த்தி வீறு நடைபோடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள்" என்றார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நம் மாநிலத்தின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1%ஆக அதாவது 23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது என சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.

இவை, தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் இந்திய கூட்டணி என்றும் பாடுபடும், இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்தி வீறுநடைபோடும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை இந்தியா கூட்டணி தமிழகத்தில் பெறும், வரலாறு படைக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News