தமிழ்நாடு
நாகேந்திரனை வேறு மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
- நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.
- நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி மறுப்பு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் நாகேந்திரனை அனுமதிக்கக்கோரி மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நாகேந்திரன் உடல்நிலை குறித்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரி அறிக்கை தாக்கல் செய்தது.
நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அறிக்கையில் இல்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.