தமிழ்நாடு

புயல், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-01 08:10 GMT   |   Update On 2024-12-01 08:10 GMT
  • சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் புயல், மழை வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு, உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அதிகளவில் மழை பெய்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னையில் 32 நிவாரண முகாம்களில் 1,018 பேர் தங்க வைக்கப்பட்டு அனைத்து தேவையும் செய்து கொடுக்கப்பட்டன.

* சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

* புயல் கரையை கடந்த நிலையில் மழை வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* எதையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

* வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மீட்பு பணியில் அமைச்சர் பொன்முடியுடன் செந்தில் பாலாஜி, சிவசங்கர் இணைந்துள்ளனர்.

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* புயல், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தவற்காக மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்.

* மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

* புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர் பாதிப்பு குறித்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News