பொங்கல் பரிசுத்தொகுப்பு- ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்
- அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும்.
2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், 2ம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும், பிற்பகலில் 200 பேருக்கும் போக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசுத்தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசாரின் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.