தமிழ்நாடு
புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- இன்று காலை 9 மணி முதல் நீர் திறக்கப்படுகிறது.
தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்தது. பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
21.30 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தொடர் கனமழை காரணமாக 19.69 அடியை எட்டியது. கிட்டத்தட்ட முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இன்று காலை 9 மணி முதல் நீர் திறக்கப்படுகிறது.
ஏரியில் இருந்து நீர் திறக்கப்படுவதை அடுத்து வடகரை, புழல், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.