தமிழ்நாடு

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்

Published On 2024-12-01 09:44 GMT   |   Update On 2024-12-01 09:50 GMT
  • ஃபெஞ்சல் புயல் வலுவிழந்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
  • புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை முழுமையாக கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.

இதன் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மூன்று மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், புதுச்சேரி மாநிலத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 11 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்கால் ஆகிய 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News