தமிழ்நாடு

போலீஸ் விசாரணைக்கு நாளை ஆஜராக மாட்டேன்- சீமான் திட்டவட்டம்

Published On 2025-02-27 15:55 IST   |   Update On 2025-02-27 16:01:00 IST
  • நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.
  • என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.

என் மீது தீவிரம் காட்டும் போலீசார் பொள்ளாச்சி போன்ற சம்பவங்களில் தீவிரம் காட்டாதது ஏன் ? என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சீமான் வீட்டில் ஒட்டப்பட்டசம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் காவலாளி, உதவியாளரை போலீசார் அழைத்து சென்றதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

சம்மன் ஒட்டி விசாரணைக்கு அழைப்பதால் எனக்கு அசிங்கமில்லை.

என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறது.

நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.

என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.

சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் அமர வைத்து விசாரிக்க வேண்டும்.

என் மீது புகாரளித்த பெண்ணிடம் குற்றத்திற்கான சான்றை கேட்க வேண்டும், அந்த நாடகத்தை காண காத்திருக்கிறேன்.

பெரியார் விவகாரத்தில் என்னை சமாளிக்க முடியாமல் இந்த பெண்ணை வைத்து முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News