தமிழ்நாடு

சீமானுக்கு நாளை வரை கெடு - வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்

Published On 2025-02-27 13:21 IST   |   Update On 2025-02-27 13:21:00 IST
  • ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார் சீமான்.
  • எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்றார்.

சென்னை:

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இருப்பினும் சீமான், இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பேட்டியளித்த சீமான், சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்றார்.

இந்த நிலையில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கிழித்தனர். 

Tags:    

Similar News